October 3, 2022

குறைந்த விலையில் அறிமுகமானது
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன்

புது தில்லி, செப்.15

ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் அசத்தலான சி30எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பம்சங்களாவது: ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720×1,600 பிக்சல்ஸ், 60 யஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டோ-கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ சிப்செட் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன். 2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

Spread the love