October 4, 2022

குருவாயூர் கோயிலில் அன்னதானத்துக்கு
முகேஷ் அம்பானி ரூ.1.51 கோடி நன்கொடை

குருவாயூர், செப்.19

குருவாயூர் கோயிலில் முகேஷ் அம்பானி அன்னதானத்துக்கு ரூ.1.51 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி வழிபாடு மேற்கொண்டார். அத்துடன், பக்தர்களின் அன்னதானத்துக்காக அவர் ரூ.1.51 கோடி நன்கொடை அளித்தார்.

இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, குருவாயூர் கோயிலில் சனிக்கிழமை வழிபட்டார். அவருடன், அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி உடன் வந்தார். கோயில் சார்பில் ரூ.50 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கு முகேஷ் அம்பானியிடம் நிதியுதவி கோரப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார் என்றார்.

Spread the love