December 9, 2022

கிராஷ் டெஸ்டில் அசத்திய ரேன்ஜ் ரோவர் கார் 5 நட்சத்திர குறியீடுகளை பெற்றது

மும்பை, நவ.21

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 கார்களில் ஒரு காரும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெறவில்லை. ரேன்ஜ் ரோவர் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 84 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.1 புள்ளிகளையும், சிறியவர்கள் பயணிக்கும் போது 87 சத புள்ளிகளையும் பெற்றது. இதில் 49-க்கு 43 புள்ளிகளை பெற்றது. பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதம் பெற்றது. இதில் 16-க்கு 13.2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

2022 ரேன்ஜ் ரோவர் மாடல் ஆபத்தான சாலைகளில் 72 சத புள்ளிகளை பெற்றது. இதில் 54-க்கு 39.1 புள்ளிகளை பெற்றது. யூரோ என்சிஏபி டெஸ்டில் கலந்து கொண்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது 85 சத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.4 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட டெஸ்டிங்கிலும் 85 சத புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளது. காரில் உள்ள பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சத புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 16-க்கு 13.2 புள்ளிகளை ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் பெற்றது. ஆபத்தான சாலைகளில் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 69 சத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் 54-க்கு 37.5 புள்ளிகளை பெற்றுள்ளது.

Spread the love