September 27, 2022

கார்கள்விலை உயர்த்துகிறது போக்ஸ்வேகன்

A VW sign is seen outside a Volkswagen dealership in London, Britain, November 5, 2015. REUTERS/Suzanne Plunkett/File photo

புது தில்லி, செப்.22

வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் இந்தியா’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

போக்ஸ்வேகன் நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளின் விலையையும், 2 சதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த விலை உயர்வு, அக்டோபர் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அதை ஈடுகட்டும் வகையில், வாகனங்களின் விலையை சற்று அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love