October 4, 2022

கான்கார்டு என்விரோ சிஸ்டம்ஸ்
ஐபிஓ வெளியீட்டுக்கு செபி அனுமதி

புது தில்லி, செப்.6

சுற்றுச்சூழல் பொறியியல் தீர்வுகளுக்கான நிறுவனமான கான்கார்டு என்விரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்நிறுவனம், கடந்த ஜூலையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபிக்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, செபி அனுமதி வழங்கி உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, ரூ.175 கோடிக்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 35.69 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திரட்டப்படும் நிதியைக் கொண்டு கடனை அடைப்பது, துணை நிறுவனங்களில் நடைமுறை மூலதன முதலீடுகளை மேற்கொள்வது, பொதுவான நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தொழிற்சாலைகளின் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

Spread the love