October 3, 2022

கவாஸாகி இசட்900 பைக்
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மும்பை, செப்.15

கவாஸாகி நிறுவனம் அதன் இசட்900 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவமான கவாஸாகி இந்தியாவில் அதன் 2023 கவாஸாகி இசட்900 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுக விலையாக இருசக்கர வாகனத்திற்கு ரூ. 8.93 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது தற்போது விற்பனையில் இருக்கும் இசட் 900-ஐக் காட்டிலும் ரூ. 51 ஆயிரம் அதிக விலை ஆகும்.

பெரியளவில் மாற்றம் செய்யப்படாமலே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், தற்போது இரு புதிய நிற தேர்வுகளில் கவாஸாகி இசட்900 பைக்கை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். புதிய நிற தேர்வாக இசட்900 -ஐ மெட்டாலிக் பேந்தம் சில்வர்/ மெட்டாலிக் கார்பன் கிரே அல்லது இபோனி/ மெட்டாலிக் மேட் கிரஃபேன் ஸ்டீல் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த இருசக்கர வாகனத்தில் கவாஸாகி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிறுவனம் சமீபத்தில் 2023 கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் பைக்கையும் இதேபோல் இருவிதமான புதிய நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்டிருந்த 948 சிசி, இன்லைன்-4, லிக்யூடு கூல்டு மோட்டாரே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love