December 8, 2022

கவாசகி நின்ஜா 650 இந்திய சந்தையில் அறிமுகம்

மும்பை, நவ.17

கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

புதிய மாடல் அதன் முந்தைய வெர்சனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 2023 கவாசகி நின்ஜா 650 மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் மட்டும் முந்தைய மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் முன்புறம் கூர்மையான முகம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரண்ட் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் கவாசகி டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேஆர்டிசி 2-லெவல் சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும் இதை முழுமையாக ஆஃப் செய்ய முடியும்.

புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்இடி இலுமினேசன், டிராக்சன் கண்ட்ரோல் மட்டுமின்றி 2023 மாடலில் 4.3 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், கவாசகி ரைடாலஜி செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

2023 கவாசகி நின்ஜா 650 விலை ரூ. 7,12,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Spread the love