September 27, 2022

கவாசகி டபிள்யு175 செப்.25ந் தேதி அறிமுகம்

மும்பை, செப்.21

கவாசகி டபிள்யு 175 செப்.25ந் தேதி அறிகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பைக் அறிமுகமானதும் இது கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெறும். மற்ற டபிள்யு சீரிஸ் மாடல்களை போன்றே கவாசகி டபிள்யு 175 மாடலிலும் வட்ட வடிவ ஹலோஜென் யஹட்லேம்ப், வட்ட வடிவ அனலாக் ஸ்பீடோமீட்டர், முன்புற போர்க் கெய்ட்டர்கள், ஒற்றை இருக்கை, முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் சாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் கவாசகி டபிள்யு 175 மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்திய சந்தையில் டபிள்யு 175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம். பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் நி800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும்.

இதில் டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

Spread the love