November 29, 2022

கவாசகி கேஎக்ஸ்250 இந்திய சந்தையில் அறிமுகம்

மும்பை, நவ.10

இந்தியா கவாசகி மோட்டார் நிறுவனம் 2023 கேஎக்ஸ்50 டர்ட் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புதிய கவாசகி கேஎக்ஸ்250 விலை ரூ.7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் பந்தய களத்துக்கான மாடல் என்பதால், இதனை பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக இந்த பைக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும், இந்த மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியான மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருக்கிறது.

மேலும், புதிய கவாசகி கேஎக்ஸ்250 மாடல் லைம் கிரீன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

249சிசி, லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினில் ஃபிங்கர்-ஃபாலோவர் வால்வு ஆக்டுவே­ன், இண்டேக் மற்றும் எக்சாஸ்ட் போர்ட்களில் ரிவைஸ்டு பிராசஸிங் உள்ளது. இதில் ரிவைஸ்டு கிரான்க்-கேஸ் டிசைன் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய லுயீ250 மாடலில் புதிய கியரிங், ரிவைஸ்டு சஸ்பென்சன் செட்டிங் மற்றும் புதிய டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தவிர புது மாடலில் குறைந்த எடை மற்றும் அகலமான ஃபூட்பெக், நீண்ட எக்சாஸ்ட் ஹெடர் பைப், மேம்பட்ட இக்னி­ன் டைமிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் லான்ச் கண்ட்ரோல் மற்றும் மூன்று என்ஜின் மேப் சாய்ஸ் கொண்டுள்ளது.

Spread the love