November 29, 2022

கர்நாடகாவில் ஜேஎஸ்டபிள்யு ரூ. 1 லட்சம் கோடி முதலீடு
ஜேஎஸ்டபிள்யு குரூப் தவைவர் சஜ்ஜன் ஜிண்டால் தகவல்

பெங்களூரு, நவ.3

பெங்களூரில் நடைபெற்ற குளோபல் இன்வெஸ்டார்ஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜேஎஸ்டபிள்யு குரூப் தவைவர் சஜ்ஜன் ஜிண்டால், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து உள்ள தங்களது அனைத்து வர்த்தகத்திலும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜேஎஸ்டபிள்யு குரூப் கர்நாடகா-வில் ஸ்டீல், கிரீன் எனர்ஜி, சிமெண்ட், பெயிண்ட்ஸ் மற்றும் நியூ கிரீன் பீல்டு துறைமுகம் ஆகியவற்றில் ஏற்கனவே 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் செய்ய முடிவு செய்துள்ளதாக சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

மேலும், 2023ஆம் நிதியாண்டில் கர்நாடகா மாவட்டம் பெல்லாரியில் நடந்தி வரும் ஸ்டீல் ஆலையையும், விஜயநகரில் உற்பத்திப் பிரிவில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுக்கு 12 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட விஜயநகரில் உள்ள உற்பத்தி ஆலை தான் இந்தியாவின் மிகப்பெரிய ஓரே இடத்தில் ஒருங்கிணைந்த ஸ்டீல் தயாரிப்புத் தளமாகும். “ஒரே மாநிலம், பல வாய்ப்புகள்” என்ற மந்திரத்தை உண்மையிலேயே பிரதிநிதித்து வருகிறது கர்நாடக மாநிலம். இந்தியாவின் மிகவும் விருப்பமான முதலீட்டு இடங்களில் ஒன்றாகக் கர்நாடகா தனது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.

Spread the love