November 29, 2022

கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 52 சதம் உயர்வு

சென்னை, அக்.25

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், 52 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.250 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.165 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 52 சதம் அதிகரித்துள்ளது.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அந்த காலகட்டத்தில், வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,821.05 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,562.61 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.680 கோடியாக இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 21 சதம் அதிகரித்து ரூ.831 கோடியாக உள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்த வாராக் கடன் 7.38 சதவீதத்தில் இருந்து 3.97 சதவீதமாக சரிந்துள்ளது என்று கரூர் வைஸ்யா வங்கி செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love