December 8, 2022

கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை நடப்பாண்டில் 25,475-ஆக அதிகரிப்பு: அசோக் லேலண்ட்

மும்பை, நவ.14

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கடந்த ஆண்டு இழப்பைச் சந்தித்த ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த ஆண்டின் அதே மாதங்களில் லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.199 கோடியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.83 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. மதிப்பாய்வுக்கு உள்பட்ட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.8,266 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,458 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை, கடந்த ஆண்டில் 11,988-ஆக இருந்து, தற்போது 25,475-ஆக அதிகரித்துள்ளது. இது, சந்தையில் 9.6 சத சந்தைப் பங்கை நிறுவனம் அடைய உதவியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love