September 27, 2022

கடன் வட்டி விகிதங்களை 0.10 சதம்
இந்தியன் வங்கி உயர்த்தியது

சென்னை, செப்.3

இந்தியன் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதம் வரை உயர்த்தியுள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடன் வட்டி விகிதங்கள் குறித்து வங்கியின் சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழு, பல்வேறு தவணைக்காலங்களில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. (செப். 3) முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அதன் பிறகு ஓராண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதத்திற்கு பதிலாக 7.75 சதமாக இருக்கும்.

ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதம் வரை அதிகரிப்பட்டு 6.95 முதல் 7.60 சதம் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக பெரும்பாலும் வாகனக் கடன், வீட்டு வசதிக் கடன், தனி நபர் கடன் வட்டி விகிதங்கள் உயரும்.

Spread the love