October 3, 2022

கடன் வட்டி விகிதங்களை எஸ்பிஐ உயர்த்தியது

மும்பை, செப்.16

கடன்களுக்கான வட்டி விகிதங்களை எஸ்பிஐ 0.7 சதம் வரை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கி வழங்கும் பிபிஎல்ஆர் கடன் வட்டி விகிதங்கள் 0.7 சதம் வரை உயர்த்தப்படுகின்றன. அதன்படி, தற்போது 12.75 சதமாக இருக்கும் பிபிஎல்ஆர் வட்டி விகிதம், 13.45 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்பிஐ-யில் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தி வரும் மாதாந்திர தவணை சற்று அதிகமாகும்.

மேலும், ஆர்பிஐ தனது ரெப்போ விகித்ததை உயர்த்தியதன் எதிரொலியாக இந்த கடன் வட்டி விகித உயர்வை எஸ்பிஐ அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-ப் பின்பற்றி, இனி மேலும் பல வங்கிகள் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love