October 3, 2022

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 திரட்டியது ஐஓசி

புது தில்லி, செப்.3

நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரே­ன் நிறுவனம் அரசுப் பத்திரங்களை விட குறைவான வட்டி விகிதத்தில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.2,500 கோடி நிதி திரட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐஓசி நிறுவன இயக்குநர் சந்தீப் குப்தா தெரிவித்துள்ளதாவது:

என்சிடி வெளியீடு முலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்¼ளாம். 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட அந்த கடன் பத்திரங்களுக்கு 7.14 சத வருடாந்திர வட்டி வழங்கப்படும் என்றார். இது மற்ற கடன் பத்திரங்க¼ளாடு ஒப்பிடுகையில் குறைந்த வட்டி விகிதமாகும். விற்பனையாகியுள்ள கடன் பத்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரும் 6ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.

Spread the love