October 4, 2022

கடன்களுக்கான வட்டி விகிதங்களை பஞ்சாப் நேசனல் வங்கி உயர்த்தியது

மும்பை, செப்.1

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பஞ்சாப் நேசனல் வங்கி 0.05 சதம் வரை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிஎன்பி வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெபோ விகித்ததை ஆர்பிஐ உயர்த்தியதன் எதிரொலியாக, பெரும்பாலும் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்கான கடனாகவும் தனி நபர் கடனாகவும் வழங்கப்படும் எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், செப்.1 முதல் அதிகரிக்கப்படுகின்றன.

அதன்படி, ஓராண்டு தவணைக் காலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதத்திலிருந்து 7.70 சதமாக உயர்கிறது. மூன்றாண்டு தவணை கடன்களுக்கான வட்டி விகிதமும் 0.05 சதம் அதிகரித்து 8 சதமாக உயர்கிறது. இது தவிர, ஒன்று, மூன்று, ஆறு மாத தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.10 முதல் 7.40 சதமாக இருக்கும் என்று அந்த அவ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love