October 4, 2022

கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் பரோடா வங்கி

மும்பை, செப்.12

பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை தங்களது எம்சிஎல்ஆர் வகை கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதம் வரை உயரத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை அனைத்து தவணைக்காலக் கடன்களுக்கும் 0.10 சததம் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு செப். 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வங்கியில் ஓர் ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போதுள்ள 7.65 சதத்திலிருந்து 7.75 சதமாக உயர்த்தபட்டுள்ளது. இது கார், தனிநபர் மற்றும் வீட்டு கடன் வட்டிகளை அதிகரிக்கும்.

இரண்டு மற்றும் மூன்று ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதமும் 7.80 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்துக்கும் குறைவான கால கடன்களுக்கு வட்டி விகிதம் 7.05 சதமாகவும் ஒரு மாதத்துக்கான வட்டி விகிதம் 7.15 சதமாகவும், மூன்று மற்றும் ஆறு மாத கடன்களுக்கு வட்டி விகிதம் 7.70 சதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பரோடா வங்கியின் ஓராண்டுக்கான கடன் வட்டி விகிதம் 7.70 சதத்திலிருந்து 7.80 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு மாத கடன்களுக்கு 7.55 சத்தில் இருந்து 7.65 சதமாக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத கடன்களுக்கான வட்டி விகிதம் 7.45 சதத்திலிருந்து 7.50 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் செப். 12 முதல் அமலுக்கு வரும் என்று பரோடா வங்கி தெரிவித்துள்ளது.

Spread the love