December 8, 2022

கடனுக்கான வட்டியை அதிகரித்தது எஸ்பிஐ வங்கி

புது தில்லி, நவ.16

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வழங்கும் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை, 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவ்வங்கியில் கடன் பெறுபவர்கள், கூடுதல் வட்டி செலுத்த நேரிடும். மேலும், இந்த வட்டி உயர்வு, தற்போது அமலுக்கு வருவதாக, வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கு அடிப்படையான, ஓராண்டு எம்சிஎல்ஆர் பெஞ்ச் மார்க் வட்டி விகிதம், 10 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதம், 7.95 சதமாக இருந்தது, 8.05 சதமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் வட்டி விகிதம், தலா 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, முறையே 8.25 சதம் மற்றும் 8.35 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர்., 15 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 7.75 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Spread the love