September 27, 2022

கடந்த நிதி ஆண்டில் 56,769 டிஎம்டி
பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி

புது தில்லி, பிப்.8

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி கூறியதாவது:

உள்நாட்டு தேவை போக, கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்த பெட்ரோலியப் பொருட்கள் விவரம்:

அதிவேக டீசல், அதிவேக பெட்ரோல், விமான எரிபொருள், நாப்ஃதா போன்றவற்றை எண்ணெய் நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, துருக்கி, நேபாளம், மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

கடந்த 2019-20ம் ஆண்டில் 65,685 (டிஎம்டி-ஆயிரம் மெட்ரிக் டன்கள்) பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2,54, 018 கோடி. கடந்த 2020-21ம் ஆண்டில் 56,769 டிஎம்டி பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 1,57,168 கோடி.

Spread the love