January 21, 2023

கடந்த நிதியாண்டில் பாஜக ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றது: தேர்தல் ஆணையம்

புது தில்லி, ஜன.18

கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கடந்த 2021-22ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்றது ரூ.1,033.7 கோடி ஆகும். மேலும்,அக்கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது. அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது என தெரிவித்துள்ளது.

Spread the love