பெங்களூரு, ஜன.18
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம்(டிசிஎஸ்), கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.10,846 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து, டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.10,846 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.9,769 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.48,885 கோடியிலிருந்து 19.1 சதம் வளர்ச்சியடைந்து ரூ.58,229 கோடியாக உயா?ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.