October 4, 2022

கடந்த ஜூன் மாதம் 3,200க்கும் அதிக யூனிட்கள் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்தது

பெங்களூரு, செப்.2

இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாத விற்பனையில் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 2022 ஜூன் மாத வாக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3,200-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர கடந்த ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி காரணமாக பலர் இவற்றை வாங்க துவங்கி உள்ளனர். வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மாடல்கள் மாறி வருகின்றன.

முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எஸ்பிஐயுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக நிதி சிக்கல் இன்றி வாங்கி வருகின்றனர். சமீபத்தில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450 எக்ஸ் ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.66 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love