December 9, 2022

கடந்த செப்டம்பர் காலாண்டில்
ரெப்கோ ஃபைனான்ஸ் கடன் வழங்கல் அதிகரிப்பு

சென்னை, நவ.14

ரெப்கோ வங்கியின கடன் வழங்கல் கடந்த செப்டம்பர் காலாண்டில் 54 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கின் மொத்த வருவாய் ரூ.371.6 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.334.5 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், வங்கியின் நிகர லாபமும், கடந்த நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் ரூ.85.9 கோடியாக இருந்து, நடப்பு நிதியாண்டின் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ரூ.71.2 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரம், மதிப்பீட்டு காலாண்டில் வங்கி அனுமதித்துள்ள கடன்களின் மதிப்பு ரூ.829.5 கோடியாக உயாந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் கடனளிப்பான ரூ.523 கோடியுடன் ஒப்பிடுகையில், அது தற்போது 54 சதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love