October 3, 2022

கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 32 சதம் அதிகரிப்பு

புது தில்லி, செப்.2

நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 32 சதம் உயர்ந்துள்ளதாக, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் அறிவித்துள்ளது. இது குறித்து, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நரேன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, போட்டியாளர்களை சமாளிப்பதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.ஜூன் காலாண்டில், ஆடைகள் ஏற்றுமதி 32 சதம் அதிகரித்து, ரூ.36 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலாண்டில் இது, ரூ.27,200 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முழு நிதியாண்டில், ஆடைகள் ஏற்றுமதி ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்தது. அரசு இத்துறையினருக்கு, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தையும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love