January 22, 2023

கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் வருமான வரி வசூல் 25 சதவீதம் அதிகரிப்பு

சென்னை, ஜன.13

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நன்றாக நகரமயமாக்கப்பட்ட பகுதியாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிதியாண்டு 1991-1992ல் நேரடி வரி வசூல் ரூ 1,108 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021-22) மொத்த நேரடி வரி வசூல் முதன்முறையாக ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டியது, அதாவது ரூ 1,01,499 கோடி, நிகர வரி வசூல் 90,108 கோடி. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாட்டின் கருவூலத்திற்கு நிதி பங்களிப்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நான்காம் இடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் வரி வசூல் இலக்கு ரூ 1,08,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இலக்கு ரூ 81,000 கோடிகள் விட 33% அதிகம். கடந்தாண்டின் வரி வசூலை நடப்பாண்டின் வரி வசூலை ஒப்பிடும்போது, அதன் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடத்தில் உள்ளது. இன்றைய தேதியில் மொத்த வரி வசூல் ரூ 92,920 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் மொத்த வரி வசூல் ரூ 73,035 ஆகும், மொத்த வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மொத்த வரி வசூலின் வளர்ச்சி 27.23 % விழுக்காடு ஆகும். இன்றைய தேதியில் நிகர வரி வசூல் ரூ 80,480 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் நிகர வரி வசூல் ரூ 64,102 ஆகும், நிகர வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் நிகர வரி வசூலின் வளர்ச்சி 25.5 % விழுக்காடு ஆகும். நிதியாண்டு 2021-22ல் நிகர வரி வசூல் ரூ 90,180 கோடி, இதில் TDS ன் வரி வசூல் ரூ 47,977 கோடி ( அஃதாவது 53 விழுக்காடு). நிதியாண்டு 2022-23ல் வீ.ம்.றீ ன் வரி வசூல் இன்றைய தேதியில் ரூ 47,313 கோடி, இதே தேதியில் சென்ற நிதியாண்டை விட இவ்வருட வீ.ம்.றீ ன் வரி வசூலின் வளர்ச்சி 27 % விழுக்காடு ஆகும்.

மூலத்தில் பிடிக்கப்படும் வரி / மூலத்தில் வசூலிக்கப்படும் வரி என்பது நீங்கள் சம்பாதிக்கும்போதே செலுத்தவும் என்கிற அடிப்படையில் அரசாங்க கருவூலத்திற்கு சீரான வருவாயை வழங்கும் பொருட்டு உருவானது. வரிகளை வசூலிக்க இது ஒரு திறமையான மற்றும் எளிமையான வழியாகும். வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு சுய தணிக்கைக்கான பாதையை உருவாக்குகிறது.

தற்போது, ​​அகில இந்திய அளவிலான மொத்த வரி வசூலில் 50% டிடிஎஸ் பங்களிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில், 2021-22 நிதியாண்டில் மொத்த நிகர வரி வசூலில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டிடிஎஸ் ஆணையரகங்கள் 53% பங்களித்துள்ளன. 2022-23 நிதியாண்டில் (31.12.2022 வரை), டிடிஎஸ்/டிசிஎஸ் வசூல் ரூ.38,817 கோடி மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% கவனிக்கக்கூடிய விகிதத்தில் வளர்ந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 193 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. டிடிஎஸ் இணக்கங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, இ-வெரிபிகேசன் மற்றும் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 133ஏ(2ஏ)-ன் கீழ் சர்வே நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில், கூட்டுறவு வங்கிகள், உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மீடியா, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அரசாங்கக் அலுவலகங்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி மொத்தம் 124 SURVEY நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாகப் டிடிஎஸ் பிடித்தம் செய்யாத / பிடித்தம் செய்து அரசாங்க கருவூலத்தில் செலுத்தப்படாத தொகையாக ரூ.245.89 கோடி கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love