October 4, 2022

கடந்த ஆகஸ்ட் மாதத்தில்
எம்ஜி மோட்டார் விற்பனை சரிவு

புது தில்லி, செப்.6

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சில்லரை விற்பனை 11 சதம் சரிவைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 4,315 கார்கள் விற்பனையாகியிருந்தன. இந் நிலையில், கடந்த மாதம் 3,823 கார்களை மட்டுமே நிறுவனம் விற்பனை செய்தது. இது, 11 சதம் சரிவாகும்.

மேலும், நிறுவனத்தின் விநியோகக் கட்டமைப்பில் பின்னைடைவு ஏற்பட்டதால் இந்த விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் இந்தக் குறை சரிசெய்யப்படும். அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, நிறுவனம் புதிய எக்ஸிகியூடிவ் வகை ரகங்களை அறிமுகப்படுத்துவது, உள்ளூர்மயமாக்கல் உள்ளிட்ட பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love