December 8, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில்
பிரிட்டனின் பணவீக்கம் 11.1 சதமாக அதிகரிப்பு

புது தில்லி, நவ.17

பிரிட்டனின் பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில், 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11.1 சதமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய வரி மற்றும் செலவு திட்டங்களை பிரிட்டன் வெளியிட உள்ள நிலையில், தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, மக்களின் வாழ்க்கை செலவுக்கான நெருக்கடியை தணிக்க, மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல், அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், அக்டோபரில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்பையும் தாண்டி அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பிரிட்டனில், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை அதிகரித்ததை அடுத்து, பணவீக்கம், 1981 அக்டோபருக்கு பின் அதிக உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில் 6.77 சதமாக குறைந்துஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love