December 8, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி: ர´யா முதலிடம்

புது தில்லி, நவ.7

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த 2022 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 0.2 சதம் மட்டுமே இருந்து வந்தது. இதுவே அக்டோபரில் ஒரு நாளைக்கு 9,35,556 பேரல் இறக்குமதி செய்யும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. அக்டோபரில் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 22 சதம் ரஷியாவில் இருந்து வந்துள்ளது. இதற்கு அடுத்து ஈராக்கில் இருந்து 20.5 சதம், சவூதி அரேபியாவில் இருந்து 16 சதம் இறக்குமதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷியா படையயடுத்ததைத் தொடர்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. இதனால், ரஷியாவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலர்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்யத் தொடங்கின. இந்த கொள்முதல் படிப்படியாக உயர்ந்து, இப்போது இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், உக்ரைன்-ரஷியா போர் விசயத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை. எனினும், இது தொடர்பாக அந்த நாடுகள் இந்தியாவிடம் நேரடியாக அதிருப்தி தெரிவிக்கவில்லை.

Spread the love