December 9, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில்
அசோக் லேலண்ட் விற்பனை 34 சதம் அதிகரிப்பு

சென்னை, நவ.4

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 34 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை 14,863-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 11,079 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த அக்டோபர் மாத விற்பனை 34 சதம் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த மாதத்தில் உள்நாட்டு விற்பனை 13,860-ஆக இருந்தது. 2021-ஆம் ஆண்டு அக்டோபா? மாதத்திய உள்நாட்டு விற்பனையான 10,043 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகமாகும். எனினும், கடந்த ஆண்டு அக்டோபரில் 1,036-ஆக இருந்த நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி, இந்த அக்டோபரில் 1,003-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love