November 29, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில் 61.56 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்

சென்னை, நவ.1

கடந்த அக்டோபர் மாதத்தில் 61.56 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னையில் மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

01.01.2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 3,01,15,886 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.08.2022 முதல் 31.08.2022 வரை மொத்தம் 56,66,231 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.09.2022 முதல் 30.09.2022 வரை மொத்தம் 61,12,906 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.10.2022 முதல் 31.10.2022 வரை மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 21.10.2022 அன்று 2,65,683 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 43,454 குறிப்பிடத்தக்கது. பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது 2022, அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 36,33,056 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love