December 9, 2022

கடந்த அக்டோபரில் வாகன விற்பனை 8.32 சதம் வளர்ச்சி
மனீஷ் ராஜ் சிங்கன்யா தகவல்

புது தில்லி, நவ.8

கொரோனா காலத்திற்கு முன்பிருந்த வாகன விற்பனையை விட, முதல் முறையாக கடந்த அக்டோபரில், 8.32 சத விற்பனை வளர்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது என, வாகன முகவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மனீஷ் ராஜ் சிங்கன்யா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதுவும், 42 நாள் பண்டிகை காலத்தை ஒப்பிடும் போது, 5.82 சதமாக விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையை ஒப்பிடும் போது, வாகன விற்பனை வளர்ச்சி 48 சதமாகவும், பண்டிகை நாட்கள் விற்பனை வளர்ச்சி, 28 சதமாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், நடப்பு 2022ம் ஆண்டில், வாகன துறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பண்டிகை கால விற்பனையின்போது, அனைத்து ரக வாகனங்களையும் வாங்க, வாடிக்கையாளர்கள் அதிகமாக திரண்டதில், கடந்த 4 ஆண்டுகளில் 2022 சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love