January 23, 2023

ஓலாவின் கேருவா எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்

புது தில்லி, ஜன.11

ஓலா நிறுவனம், அதன் எஸ் 1, எஸ் 1 புரோ ஸ்கூட்டர்களில் கேருவா என்ற புதிய ஆரஞ்சு நிற எடிசன் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. அத்துடன், எஸ் 1 வகை ஸ்கூட்டர்களில் கூடுதலாக, கறுப்பு, நீலம் உள்ளிட்ட 5 புதிய வண்ணங்களை சேர்த்து வெளியாக உள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. மற்றபடி, இந்த ஓலா ஸ்கூட்டர்களில், எந்தவித தொழில்நுட்ப மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இதுகுறித்து, ஓலா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான அன்ஷில் கண்டெல்வால் தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய, எளிதாக அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் எங்கள் ஸ்கூட்டர்கள் இருப்பதால் தான், மின்சார 2 சக்கர வாகன சந்தையில், ஓலா முன்னிலையில் நிற்கிறது. வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தலின் காரணமாக, கேருவா என்ற எடிசனை, எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ ஸ்கூட்டர்களில் கொண்டு வந்துள்¼ளாம். அத்துடன், அவர்களை ஈர்க்கும் வகையில், மொத்தம் 11 நிறங்களில் ‘ஓலா ஸ்கூட்டர்’கள் வெளியாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love