December 9, 2022

ஓப்போ ஏ17கே ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

சென்னை, நவ.21

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தான் ஒப்போ ஏ17கே எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஒப்போ போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாமின் தகவலின்படி, 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17கே போன் முன்புரூ.10,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது: 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையில் நிறுவனத்தின் சொந்த கலர்ஸ் ஓஎஸ் 12.1 கொண்டு இயங்கும் ஒப்போ ஏ17கே ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பின்புறத்தில், 8 எம்பி சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் வசதி மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் – 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Spread the love