November 29, 2022

ஓசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, நவ.16

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது.

மேலும், ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் அமையவுள்ள இந்த புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

Spread the love