October 3, 2022

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை விப்ரோ நிறுவனத்தில் 300 பேர் நீக்கம்

புது தில்லி, செப்.22

விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களில் 300 பேர், ஒரேநேரத்தில், இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தகவலை விப்ரே நிறுவன தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றும் ஒருவர், இன்னொரு பணியிலும் ஈடுபட்டு, கூடுதல் வருவாய் ஈட்டுவது, மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது. கொரோனாவை முன்னிட்டு, வீட்டிலிருந்து பணியாற்றி வந்த தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பலர், மூன்லைட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர்.

இது தவறு என ஏற்கனவே எச்சரித்திருந்த நிஷாத் பிரேம்ஜி, தற்போது நிறுவன ஊழியர்கள் 300 பேர், போட்டி நிறுவனங்களிலும் பணிபுரிந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மூன்லைட்டிங் கூடாது என்பதில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love