November 29, 2022

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன்
நவ.11ல் சீன சந்தையில் அறிமுகம்

மும்பை, நவ.3

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 11-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது:

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 யஹர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

மீடியாடெக் டைமண்சிட்டி 700 சிப்செட் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த ஒப்போ போன். 4880 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுஉள்ளது. குறிப்பாக வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. பிளாக், பர்பில், ப்ளூ வண்ணங்களில் இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் ரூ.16,000-விலையில்அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Spread the love