December 8, 2022

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சென்னை, நவ.17

நிறுவனம் புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை சீனா சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த போன் அனைத்துநாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களாவது:

இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 1,080×2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கலர்ஓஎஸ் 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

4800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர்,ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 5, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.20,600 ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போன் இந்திய மதிப்பில்ரூ.23,000 ஆக உள்ளது. வரும் நவம்பர் 25-ம் தேதி ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போன் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது.

Spread the love