October 4, 2022

ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு ரூ.2,474 கோடி நிதி திரட்டியது பரோடா வங்கி

மும்பை, செப்.5

பங்குச் சந்தைகள் மூலம் ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு பரோடா வங்கி ரூ.2,474 கோடி நிதியைத் திரட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பரோடா வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலா ரூ.1 கோடி மதிப்பிலான 2,474 பாதுகாக்கப்படாத – மாற்ற முடியாத ஒப்புறுதிப் பத்திரங்களை வங்கி அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இந்தப் பத்திரங்கள் முதிர்வு தேதியைக் கொண்டிருக்கவில்லை. மேலும் அவை கடன் பத்திரங்களைப் போல் இல்லாமல் பங்குகளைப் போன்ற தன்மையைக் கொண்டுள்ளன. அத்தகைய பத்திரங்கள் தேவைப்படும்போது மீட்டெடுக்க முடியாவிட்டாலும், அவற்றுக்கு எப்போதும் நிலையாக வட்டி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love