December 9, 2022

ஒன்பிளஸ் பேட் டேப்லெட்
அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம்

மும்பை, நவ.15

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, இயர்போன் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் டேப்லெட் தரமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட உயர்தர அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் ஒன்பிளஸ் பேட் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்களாவது: 12.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பி¼ள மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவு இருப்பதால் இந்த டேப்லெட் நல்ல திரை அனுபவம் கொடுக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயன்பாடுகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த செயல்திறன்கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்.

மேலும் 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 10,090 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Spread the love