January 24, 2023

ஐரோப்பிய யூனியன் நிர்ணயம் செய்ய கச்சா எண்ணெய் விலை: ரஷ்யா நிராகரிப்பு

லண்டன், டிச.5

ரஷ்ய கச்சா எண்ணெயை இனி பீப்பாய் 60 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய வேண்டுமென புதிய விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி7 நாடுகள் நிர்ணயம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை ஏற்க ரஷ்யா மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததால், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. கடல் வழியாக விநியோகிக்கப்படும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் அண்மையில் நிர்ணயம் செய்தது.

மேலும், இனி ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு கச்சா எண்ணெய் வாங்கினாலும் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலரில் வாங்க வேண்டுமென அறிவித்தது. இதனை பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பு வரவேற்றது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியன் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தன. மேலும், இந்த விலை உச்ச வரம்பு தற்போது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி7 நாடுகளில் கடல் வழி ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு முழு தடையும் தற்போது அமலுக்கு வருகிறது.

ஆனாலும் வளரும் நாடுகள் ஸ்தம்பிக்கக் கூடாது என்பதால் அந்நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஐரோப்பிய யூனியனின் இந்த விலை உச்ச வரம்பை ரஷ்யா நிராகரித்துள்ளது. அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், “இந்த விலை வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த நடவடிக்கை ரஷ்யா ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Spread the love