December 9, 2022

ஐபிஓ வெளியீடுக்கு மூலம்ரூ.2500 கோடி இந்தியாபர்ஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனம் திரட்டுகிறது

புது தில்லி, அக்.25

பேங்க் ஆப் பரோடாவின் பின்னணியில் செயல்பட்டு வரும், இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாபர்ஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.2,000-2,500 கோடி நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின் போது, ரூ.500 கோடிக்கு புதிய பங்குகளையும்; பங்குதாரர்களின் 14.12 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிறுவனத்தில், 65 சத பங்குகளை வைத்திருக்கும் பேங்க் ஆப் பரோடா, 8.9 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், தன் வசம் இருக்கும், இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 1.30 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. யூனியன் பேங்க் வசம், மொத்தம் 9 சத பங்குகள் உள்ளன.

Spread the love