October 3, 2022

ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி ஐபிஓ வெளியிட செபி அனுமதி

புது தில்லி, செப்.21

ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த ஜூன் 20ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, செபிக்கு இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.740 கோடி நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் போது ரூ.370 கோடிக்கு புதிய பங்குகளையும்; மீதி ரூ.370 கோடிக்கு, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், திரட்டப்படும் நிதியை, கடனை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், காற்றாலை செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.கோ டிஜிட்: கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பத்தின் மீதான முடிவை நிறுத்தி வைத்து உள்ளது, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 17ல் செபிக்கு விண்ணப்பித்திருந்தது.இந்நிறுவனத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love