November 29, 2022

ஐடிஎப்சி வங்கி, டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை
ரூ.5 கோடிக்கு மேற்கொண்டது: ஆர்பிஐ தகவல்

புது தில்லி, நவ.3

டிஜிட்டல் ரூபாயை, சோதனை முறையில் ஆர்பிஐ அறிமுகம் செய்தததை அடுத்து, நவம்பர் 1ம் தேதி மட்டும், 275 கோடி ரூபாய் அளவுக்கு, பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு பத்திர வர்த்தகத்தில் இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்றும்; முதல் நாளில், எந்த வித சிக்கலும் இல்லாமல், பரிவர்த்தனைகள் எளிதாக நடைபெற்று உள்ளதாகவும், ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஐடிஎப்சி வங்கி, அதன் முதல் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளை, ரூ.5 கோடிக்கு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக, மொத்தம் ஒன்பது வங்கிகள், டிஜிட்டல் ரூபாய் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளன. விரைவில் பிற வங்கிகளுக்கும் இது நீட்டிக்கப்படும். அத்துடன், சில்லரை பரிவர்த்தனைகளிலும், இம்மாத இறுதியில் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love