December 9, 2022

ஏர் ஏசியா இந்தியாவை கைப்பற்றியது ஏர் இந்தியா நிறுவனம்

புது தில்லி, நவ.3

இந்தியாவில் இயங்கி வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் டாடா குழுமத்தின் கூட்டணியில் இயங்கி வருகிறது. இந் நிலையில் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் மலேசியாவின் ஏர் ஏசியா வைத்திருந்த பங்குகளை ஏர் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் ஏர் ஏசியா இந்தியாவின் வர்த்தகம் ஆப்ரே­ன்ஸ் என அனைத்தையும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஏர் இந்தியா சேவை மற்றும் வர்த்தகத்தைப் பல வகையில் மேம்படுத்தும், குறிப்பாகச் சேவை அளிக்கும் ஊர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கொரோனா தொற்றுக்குப் பின்பு மலேசியாவின் ஏர் ஏசியா-வின் வர்த்தகமும், நிதி நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏர் ஏசியா தனது வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்து வலிமையாக்க முடிவு செய்துள்ளது.

2014ல் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கியதில் இருந்து ஏர் இந்தியா இந்தியாவில் சிறப்பான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. டாடா குழுமத்துடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது என் ஏர்ஏசியா ஏவியேசன் குரூப்-ன் சிஇஓ போ லிங்கம் தெரிவித்தார். இந்த விற்பனையில் மலேசியாவின் ஏர் ஏசியா, ஏர் ஏசியா இந்தியா-வில் வைத்திருந்த 16.33 சத பங்குகளை ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. ஏர் ஏசியா இந்தியா விற்பனை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பங்கு விற்பனை முடிந்துள்ளது.

Spread the love