January 24, 2023

ஏர் இந்தியா, விஸ்தாரா நிறுவனங்கள் இணைப்பு
டாடா குழுமம் அறிவிப்பு

புது தில்லி, நவ.30

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை இணைக்க உள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: விஸ்தாராவில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 51 சத பங்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 49 சத பங்கும் உள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சர்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏர் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரு விமான நிறுவனங்கள் இணைப்பையயாட்டி, ஏர் இந்தியாவில் ரூ.2,058 கோடியை எஸ்ஐஏ முதலீடு செய்யும். இதன் மூலம் ஏர் இந்தியாவில் எஸ்ஐஏ 25.1 சத பங்குகளைக் கொண்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏஷியா இந்தியா, விஸ்தாரா ஆகிய 4 விமான நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love