October 2, 2022

ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக
5 ஆண்டுத் திட்டத்தை அறிமுகம்

புது தில்லி, செப்.16

ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 5 ஆண்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றிய பின்பு ஊழியர்கள் முதல் நிர்வாகம் வரையில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தது மட்டும் அல்லாமல் உபரியாக இருக்கும் ஊழியர்களைப் பல வழிகளில் குறைத்தும், மறு சீரமைப்பும் செய்தது.

இந் நிலையில் ஏர் இந்தியா வியாழக்கிழமை வளர்ந்து வரும் தனது நெட்வொர்க் மற்றும் விமானங்களில் கவனம் செலுத்தவும், அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரிக்கவும், ஆன்-டைம் சேவையை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏர் இந்தியா விஹான்.ஏஐ என்ற விரிவான மாற்றத்திற்கான 5 ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டில் உள்நாட்டு விமானச் சேவையில் 30 சத வர்த்தகத்தையும், வெளிநாட்டுச் சேவையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த விஹான்.ஏஐ என்ற 5 ஆண்டுத் திட்டத்தை ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட முக்கியமான பீட்பேக் வாயிலாகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் ஆய்வு செய்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது தான் ஏர் இந்தியாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கான துவக்கம் என்பதைக் கேம்பிள் வில்சன் தெரிவித்துள்ளார்.

Spread the love