December 9, 2022

ஏப்ரலுக்குள் கூடுதல் மின் இணைப்பை கண்டறிய
மின்துறைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அவகாசம்

சென்னை, அக்.26

தமிழகத்தில் கூடுதல் மின்சார இணைப்புகளை கண்டறிய தமிழக மின்வாரியத்துக்கு ஏப்ரல் வரை ஒழுங்குமுறை ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே வீட்டில் உள்ள கூடுதல் மின்சார இணைப்புகளை கண்டறிய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகம் உத்தரவிட்டுள்ளது. மானியத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் ஒரு அடுக்குமாடி சேவை இணைப்பை மட்டுமே பெற வேண்டும் என்று உத்தரவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கூடுதல் இணைப்புகளை இரண்டு வாரங்களுக்குள் ஒரு இணைப்பாக இணைக்க மின்சார வாரியம் உத்தரவிட்டது. இந் நிலையில் வீட்டு இணைப்புகளை ஒழுங்குப்படுத்துவதற்கு, ஒவ்வொரு வளாகத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் இணைப்புகளை கண்டறிந்து ஒழுங்குப்படுத்து சவலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செயல்முறைகளை முடிக்க மேலும் 7 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கழகம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love