December 8, 2022

ஏத்தர் ஸ்கூட்டருக்கு கடனுதவி வழங்கும் ஐடிஎப்சி

ஏத்தர் இரு சக்கர மின்சார வாகனங்களை வாங்க, ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஐடிஎப்சி., வங்கியுடன் இணைந்து, புதிய கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: முன்பணமாக, ஆன் ரோடு’ விலையில், 5 சதம் மட்டுமே செலுத்தினால் போதும் என்றும், வாடிக்கையாளர்களின் பழைய ஸ்கூட்டர்களை மாற்றிக்கொள்ள, முன்பணம் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மாத தவணை முறையில், 48 மாதங்களுக்கு இந்த கடனுதவியை வழங்குகிறது, ஐ.டி.எப்.சி., வங்கி. ஏத்தர் 450 எக்ஸ்’ ஸ்கூட்டரை வாங்க, மாதந்தோறும், ரூ.3,456 ம், ஏத்தர் 450 பிளஸ்’ ஸ்கூட்டருக்கு ரூ.2,975 ம், செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love