November 29, 2022

எஸ்பிஐ வங்கியின் லாபம் 74 சதம் அதிகரிப்பு

State Bank of India

புது தில்லி, நவ.7

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’, இதுவரை, எந்த காலாண்டிலும் இல்லாத அளவுக்கு, கடந்த செப்டம்பர் காலாண்டில், அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வங்கியின் லாபம், 74 சதவீதம் அதிகரித்து, 13 ஆயிரத்து, 265 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வாராக் கடன் குறைந்தது மற்றும் அதிக வட்டி வருவாய் ஆகியவை காரணமாக, செப்டம்பர் காலாண்டில் லாபம் அதிகரித்துள்ளதாக, எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு, இதே காலாண்டில் ரூ.7,627 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love