January 26, 2023

எஸ்ஐபி வாயிலாக முதலீடுகள்
கடந்த ஆண்டில் 31 சதம் அதிகரிப்பு

புது தில்லி, ஜன.19

மியூச்சுவல் பண்டுகளில், கடந்த 2022ல், எஸ்ஐபி எனும் சீரான முதலீட்டு திட்டம் வழியாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு தொகை 1.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது 2021ம் ஆண்டை விட 31 சதம் அதிகமாகும்.

இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான ஆம்பியின் தரவுகளின் படி, எஸ்ஐபி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 2020ல் ரூ.97 ஆயிரம் கோடியாகவும், 2021ல் 1.14 லட்சம் கோடியாகவும் உள்ளது.

நடப்பாண்டிலும், எஸ்ஐபி வாயிலாக தொடர்ந்து முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மியூச்சுவல் பண்டுகளில், கிட்டத்தட்ட 6.12 கோடி எஸ்ஐபி கணக்குகள் உள்ளன. இதன் வழியாக, சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வார்கள் என கருதப்படுகிறது. மேலும், கடந்த 2021 டிசம்பரில், எஸ்ஐபி வாயிலான முதலீடு ரூ.11,305 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2022 டிசம்பரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.13,573 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Spread the love